» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சர்கார் பட விவகாரம் : விஜய், முருகதாஸ் மீது சென்னை காவல்ஆணையரிடம் புகார்

வியாழன் 8, நவம்பர் 2018 2:00:04 PM (IST)

சர்கார் திரைப்பட பிரசச்னை தொடர்பாக நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸுக்கு எதிராக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி  அன்று  வெளியாகியுள்ளது.இந்நிலையில் சர்கார் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸுக்கு எதிராக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தேவராஜ் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிலும் தமிழக அரசின் முத்திரை பதித்த இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தவறான நடவடிக்கையாகும். எனவே இது குறித்து இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் மற்றும் இயக்கியுள்ள முருகதாஸ் ஆகிய இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory