» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் : சர்கார் படத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு

வியாழன் 8, நவம்பர் 2018 8:03:28 PM (IST)

நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் சர்கார் படத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார்.

விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி அ.தி.மு.க-வினர் இந்தப் படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் சர்கார் படத்துக்காக வைக்கப்பட்ட பேனர்களையும் அ.தி.மு.க-வினர் கிழித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சர்கார் படத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் எனக் குறிப்பிட்டிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory