» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சர்க்கார் படத்திற்கு எதிராக போராடுவது சட்டத்திற்கு புறம்பான செயல் - ரஜினி கண்டனம்!

வெள்ளி 9, நவம்பர் 2018 10:33:25 AM (IST)

தணிக்கை செய்த படத்தில் இருந்து காட்சிகளை நீக்க தவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், சட்டத்திற்கு புறம்பான செயல் என்று நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். 

விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் அதிமுகவை விமர்சனம் செய்தும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்தும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தனர். 

இந்த விவகாரம் நேற்று விஸ்வரூபம் எடுத்தது. தமிழகம் முழுவதும் சர்கார் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்கார் படத்திற்காகவும், நடிகர் விஜய்க்காகவும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதனால் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் சர்கார் திரையிடப்பட்ட 68 தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதோடு, முன்எச்சரிக்கையாக பேனர்களும் அகற்றப்பட்டன. பதற்றம் குறையும் வரை சென்னையில் திரையரங்குகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சர்கார் படத்திற்கு தொடர்ந்து எழுந்த சர்ச்சையால் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு ஒப்பு கொண்டுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு உரிய சென்சார் அனுமதி பெற்று பின்னர் படம் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சர்கார் படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பிற்கு நடிகர் கமல்ஹாசன், விஷால் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தில் இருந்து காட்சிகளை நீக்கச் சொல்வது சரியானதல்ல என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நள்ளிரவில் சர்கார் திரைப்பட சர்ச்சை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ரஜினிகாந்த, "தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory