» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நள்ளிரவில் போலீசார் பலமுறை கதவை தட்டினார்கள்: ஏ.ஆர்.முருகதாஸ்

வெள்ளி 9, நவம்பர் 2018 10:43:40 AM (IST)

காவல்துறையினர் என் வீட்டில் பலமுறை கதவை தட்டினார்கள் என்று இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. இப்படம் வெளியானவுடன் அதிமுகவினர் சில காட்சிகளுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவானதைத் தொடர்ந்து, படக்குழுவினர் அக்காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டனர். இது தொடர்பாக, நேற்று (நவம்பர் 7) நள்ளிரவில் சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் "முக்கியமான செய்தி: ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீஸார் விரைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்கள். இதனால் சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சை உருவானது.

மேலும் "ஏ.ஆர்.முருகதாஸ் எங்கே என்று விசாரித்துவிட்டு, போலீஸார் அவரது வீட்டிலிருந்து கிளம்பிவிட்டனர். ஏனென்றால் அவர் வீட்டில் இல்லை” என்று மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டில் தெரிவித்தது. கைது விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "காவல்துறையினர் நள்ளிரவு என் வீட்டுக்கு வந்து, பலமுறை கதவை தட்டினார்கள். நான் அங்கு இல்லாததால் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்கள். இப்போது, என் வீட்டுக்கு வெளியே போலீஸார்  இல்லை என்று எனக்கு தெரிவித்தார்கள்” என்று கூறியிருக்கிறார்


மக்கள் கருத்து

தலைவர்Nov 11, 2018 - 04:20:28 PM | Posted IP 162.1*****

சார் நீங்க யாரு? ? ? உங்க வீட்டுக்கு ஏன் போலீஸ் வருது ???? நீங்க தீவிரவாதியா? சொல்லுங்க சார்.... பதில் சொல்லுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory