» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எலிசபெத் மகாராணி பயணம் செய்த நீராவி இரயில் எஞ்சின் மீள் ஓட்டம்: பயணிகள் மகிழ்ச்சி

வெள்ளி 9, நவம்பர் 2018 4:21:12 PM (IST)இரயில் பயணிகளின் நீண்டகால ஆசையை நிறைவேற்றும் விதமாக தென்னக இரயில்வே எலிசபெத் மகாராணி பயணம் செய்த நீராவி இரயில் எஞ்சின் மீள்ஓட்டத்தை ஸ்ரீவைகுண்டம் முதல் திருச்செந்தூருக்கு விரைவில்இயக்க உள்ளது. இதன் முன்னோட்டமாக இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சிட்சன், தாம்சன், ஹெவிட்சன் ஆகியோர் 1855-இல் உருவாக்கிய நீராவி இரயில் எஞ்சின் இந்தியாவிற்கு வழங்கப்பட்டு நீராவி தொடர்வண்டி இங்கு 55 ஆண்டுகள் தனது பணியை ஆற்றியது. இந்த தொடர் வண்டியில்தான் எலிசபெத் மகாராணி பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நீராவி தொடர் வண்டியில் இந்தியமக்களும் பயணம்செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.1909-ஆம் ஆண்டு இந்த இந்த நீராவி எஞ்சின் தனது சேவையை நிறுத்தி ஜமால்பூர் மற்றும் ஹெளராவில் உள்ள பனிமனைக்கு அனுப்பப்பட்டு கண்காட்சிப் பொருளானது. 

101 ஆண்டுகளுக்கு பின்னர் இயற்கை அழிவினாலும், அதிக அளவு சிதிலமடைந்ததினாலும் தனதுதகுதியை இந்த நீராவிஎஞ்சின் இழந்தது. பின்னர் இந்த நீராவி எஞ்சின் 2010-ஆம் ஆண்டு சென்னைக்குஅருகிலுள்ள பெரம்பூர் பனிமனையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அழகு தேவதைக்கு உலகிலேயே பழமையான நீராவி எஞ்சின் என்ற சாதனை பெயர் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல கின்னஸ் சாதனையும் இந்த நீராவி எஞ்சின் பெற்றுள்ளது. இந்த சாதனை இயந்திரத்தின் மீள் ஓட்டம் 2010 ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரலுக்கும்-ஆவடிக்கும் இடையே இயக்கப்பட்டது.

அதன்பின்னர் புதுச்சேரியிலும் இயக்கப்பட்டது.தற்போது தென் பாண்டிசீமையிலுள்ள மக்களுக்கு விருந்து படைக்க திருச்செந்தூர் முதல் ஸ்ரீவைகுண்டம் வரை 33 கி.மீ.தொலைவுக்கு தன்னுடைய பாரம்பரிய மகிமையை காட்டவருகிறது. அதன் வெள்ளோட்டமாகத்தான் இன்று (09.11.2018) மதியம் சோதனை ஓட்டம் நடைபெற்றது.  இதனை இரயில் பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். எந்தெந்த நாள்களில் எந்தெந்த நேரங்களில் இயக்கப்படும்  என்பதை தென்னக இரயில்வே நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் எனத் தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory