» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊட்டியில் 6 வயது சிறுமி பலாத்காரம்: தாய்மாமன் கைது; உடந்தையாக இருந்த தாயும் சிறையில் அடைப்பு

வியாழன் 6, டிசம்பர் 2018 12:20:08 PM (IST)

ஊட்டியில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாய்மாமனை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஊட்டி அய்யப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் தனலட்சுமி (49). இவருக்கு திருமணமாகி 6 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். தனலட்சுமியுடன் அவரது தம்பி ரூபேஸ் பாபு(48) என்பவரும் வசித்து வந்தார். நேற்று வழக்கம் போல சிறுமி பள்ளிக்கு சென்றார். வகுப்பறையில் அவர் சோர்வாக விரக்தி அடைந்து காணப்பட்டார்.

இதனை பார்த்த வகுப்பு ஆசிரியை சிறுமியிடம் கேட்டார். அப்போது ஒருவித பயத்துடன் இருந்தார். விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.அதிர்ச்சியடைந்த ஆசிரியை சிறுமியை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் சமூக நல அலுவலர் முன்னிலையில் சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிறுமியை அவரது தாய் மாமன் ரூபேஸ் பாபு பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இது குறித்து வகுப்பு ஆசிரியை அளித்த புகாரின் பேரில் ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாய்மாமன் ரூபேஸ் பாபு, இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் தனலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் 2 பேரையும் ஊட்டி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம் 

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் மினியன் (55). கூலித் தொழிலாளி. இவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி சத்தம் போட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மினியனிடம் இருந்து சிறுமியை மீட்டனர். பின்னர் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மினியனை குன்னத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory