» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்திற்கு பாதிப்பு என்றால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை: ரஜினி

வியாழன் 13, டிசம்பர் 2018 3:56:45 PM (IST)

தமிழகத்திற்கு பாதிப்பு என்றால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது என்று கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை என தெரிந்து கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கி விவகாரத்தில் ஆர்பிஐ ஆளுநர் ராஜினாமா பற்றிய உண்மையை தெரியாமல் எதுவும் பேச முடியாது. பேட்ட படம் வெளிவந்த பின்பு அடுத்த படம் குறித்து பார்க்கலாம் என கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory