» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் ஆத்திரம்: தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்

வியாழன் 10, ஜனவரி 2019 10:27:46 AM (IST)

வேலூரில் விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையை மகன் எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் இன்று வெளியாகின. படத்தின் சிறப்புக் காட்சிகளைக் காண நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு திரண்டனர். அப்போது பட்டாசு வெடித்தும் உற்சாகமாக ஆடிப்பாடியும் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இந்நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடி கிழிஞ்சூரில் அஜித்தின் விஸ்வாசம் படத்தை பார்க்க பணம் தராததால் பாண்டியன் என்பவரை அவரது மகன் அஜித்குமார் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். தூங்கிக்கொண்டிருந்த போது பெட்ரோல் ஊற்றி எரித்ததில் பாண்டியன் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படம் பார்க்க பணம் தராததால் தந்தையை மகன் எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

அருண்Jan 11, 2019 - 08:09:10 AM | Posted IP 68.18*****

முட்ட போண்டா பயலுவ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory