» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரஜினியின் பேட்ட ரிலீஸ்: சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கிலேயே திருமணம் செய்த ஜோடி!!

வியாழன் 10, ஜனவரி 2019 11:44:11 AM (IST)

ரஜினியின் பேட்ட படம் ரிலீசாகியுள்ள சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கிலேயே ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரும் வரவேற்புக்கு இடையே, ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் இன்று ரிலீஸாகி உள்ளன. இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்ற தென் சென்னை அமைப்பாளர் சினோரா அசோக் தலைமையில், சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கில் இன்று (வியாழன்) காலை ஒரு ஜோடிக்குத் திருமணம் நடைபெற்றது. தாம்பரத்தைச் சேர்ந்த அன்பரசு என்பவருக்கும் காமாட்சிக்கும் திரையரங்கிலேயே திருமணம் நடந்தது. 

நாதஸ்வரம், மத்தளம் உள்ளிட்ட இன்னிசை வாத்தியங்கள் முழங்க, ஐயர் மந்திரங்கள் ஓத திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், பீரோ, வாஷிங் மெஷின், பாத்திரங்கள், சூட்கேஸ் உள்ளிட்ட ஏராளமானசீர்வரிசைகள் வழங்கப்பட்டன. புதுமணத் தம்பதியினர் பேட்ட- பொங்கல் திருவிழா என்று எழுதப்பட்ட கேக்கை வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டினர். முன்னதாக திரையரங்கிலேயே மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory