» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஸ்வாசம் திரையரங்கில் விபத்து: பால் ஊற்றும் போது அஜித்தின் 15 அடி கட்-அவுட் சரிந்து 6 பேர் படுகாயம்

வியாழன் 10, ஜனவரி 2019 4:12:03 PM (IST)

திருக்கோவிலூரில் விஸ்வாசம் படம் வெளியான திரையரங்கில் பால் ஊற்றும் போது அஜித்தின் 15 அடி கட்-அவுட் சரிந்து 6 பேர் படுகாயம் அடைந்தனர். 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள திரையரங்கில் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படம் வெளியானது. இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு அஜித்குமாரின் உருவத்துடன் கூடிய 15 அடி கட் அவுட்டுக்கு ரசிகர்கள் சிலர் மலர் மாலை அணிவித்து பாலபிஷேகம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடிரென கட் அவுட் சரிந்து விழுந்தபோது கட் அவுட் மேல் நின்றிருந்த ஆவீயூரைச் சேர்ந்த ஏழுமலை (20), கொளத்தூரைச் சேர்ந்த ஸ்ரீதர்(25), காடகனூரைச் சேர்ந்த முத்தரசன்(18) வடகரை தாழனூரைச் சேர்ந்த அருண்(18), பிரபு(25) பிரதாப்(21) ஆகியோர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

இதில் கவலைக்கிடமான நிலையில் பிரதாப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், ஸ்ரீதர், முத்தரசன் ஆகியோர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மற்றவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக திருக்கோவிலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory