» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரதமர் மோடி ஒன்றும் வாஜ்பாய் அல்ல, கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை: மு.க. ஸ்டாலின்

வெள்ளி 11, ஜனவரி 2019 1:48:37 PM (IST)

நரேந்திர மோடி ஒன்றும் வாஜ்பாய் அல்ல; திமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே கலந்துரையாடினார். அப்போது,"பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும் கூட்டணியோடு ஆட்சியமைக்கவே முன்னுரிமை அளிப்போம். கூட்டணியை பொறுத்தவரை வாஜ்பாய் காட்டிய வழியை பாஜக பின்பற்றும். தமிழகத்தில் அதிமுக, ரஜினிகாந்த் அல்லது திமுகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு பதில் கூறும்போது, அரசியல் பிரச்சனைகள் எத்தனை இருந்தாலும், வெற்றி பெறுவது மக்களுடனான கூட்டணியே என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில், மோடியின் பேச்சுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் கூறியுள்ளார். நரேந்திர மோடி ஒன்றும் அடல் பிகாரி வாஜ்பாய் அல்ல; பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இணையப்போவதும் இல்லை. என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு திமுக – பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது. அதேபோன்ற கூட்டணிக்குத் தயாராக இருப்பதாக மோடி தனது பேச்சின் மூலம் குறிப்புணர்த்திய நிலையில், ஸ்டாலின் அறிக்கை அதற்கு வாய்ப்பில்லை என தெளிவுபடுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

சாமிJan 12, 2019 - 02:04:33 PM | Posted IP 162.1*****

தம்பி சொடலை - மோடிஜி சொன்னது - சிவசேனாவுக்காக - நீயெல்லாம் வந்தாலே விளங்காது - அதுவும் ஒங்கூட ஒன்னு இருக்கே சைக்கோ ---

உண்மைJan 11, 2019 - 07:10:31 PM | Posted IP 141.1*****

நல்லா சொன்னிங்க போங்க ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory