» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொடநாடு வீடியோ: நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சனி 12, ஜனவரி 2019 5:05:12 PM (IST)

கொடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

கொடநாடு காவலாளி உட்பட 5 பேர் கொலை மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக தான் நடத்திய புலனாய்வு குறித்த ஆவணப் படத்தை தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் என்பவர் வெளியிட்டு உள்ளார். அதில் கொடநாடு கொலை, கொள்ளையில் நடந்தது என்ன என்பது குறித்து டெல்லியில் செய்தியாளர் மேத்யூஸ் விளக்கம்  அளித்து உள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கொடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory