» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாடைகளில் மறைத்து கடத்திய ரூ.8 கோடி தங்கம் பறிமுதல் - சென்னையில் 2 பெண்கள் கைது!!

சனி 12, ஜனவரி 2019 5:49:25 PM (IST)

ஹாங்காங்கில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த தென்கொரியாவைச் சேர்ந்த 2 பெண்கள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்படடுள்னர். 

ஹாங்காங்கில் இருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களை சோதனையிட்டபோது, அவர்கள் உள்ளாடைகளில்  வைத்து 24 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தங்கம் கடத்தி வந்த 2 பெண்களையும் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் சென்னையில் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார்கள்? என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் இருக்கும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory