» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெருங்குடி குப்பை கிடங்கில் மோப்ப நாய் உதவியுடன் சந்தியாவின் தலையை தேடும் பணி தீவிரம்

ஞாயிறு 10, பிப்ரவரி 2019 10:07:39 AM (IST)

பெருங்குடி குப்பை கிடங்கில் மோப்ப நாய் உதவியுடன் சந்தியாவின் உடலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (51). சினிமா இயக் குனர். இவருடைய மனைவி சந்தியா (35). துணை நடிகை. மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கடந்த 20-ந் தேதி பாலகிருஷ்ணன், சுத்தியலால் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்தார். பின்னர் அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி, 4 பார்சல்களாக கட்டி குப்பை தொட்டியில் வீசினார். இந்த சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சந்தியாவின் துண்டிக்கப்பட்ட ஒரு கை மற்றும் 2 கால்கள் அடங்கிய பார்சல் பெருங்குடி குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்டது.

பாலகிருஷ்ணன் அளித்த தகவலின் பேரில் ஜாபர்கான்பேட்டை பாலத்துக்கு அடியில் வீசப்பட்டு இருந்த சந்தியாவின் இடுப்பில் இருந்து தொடை வரையிலான பகுதியை போலீசார் கைப்பற்றினர். சந்தியாவின் தலை, இடது கை மற்றும் உடல் பகுதிகள் இன்னும் கிடைக்கவில்லை. அவற்றை பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 2 நாட்களாக மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் போலீசார் தேடினர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.நேற்று 3-வது நாளாக பெருங்குடி குப்பை கிடங்கில் மாநகராட்சி ஊழியர்கள், பொக்லைன் எந்திரங்கள் மற்றும் மோப்ப நாய் ‘டைசன்’ உதவியுடன் துணை நடிகையின் தலை, கை, உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஆனால் நேற்றும் எதுவும் கிடைக்கவில்லை. இந்த தேடுதலில் ஈடுபட்ட மோப்ப நாய் ‘டைசனு’க்கு உடல்நல குறைவு ஏற்பட்டதுதான் மிச்சம் என போலீசார் தெரிவித்தனர். 3 நாட்கள் தேடியும் கிடைக்காத நிலையில் இறுதியாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தலையை தேடும் பணி நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர். குப்பை கிடங்கை சுற்றி பருந்துகளும், 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களும் சுற்றிக்கொண்டு இருப்பதால் சந்தியாவின் உடல் பாகங்களை அவை தின்று விட்டனவா? அல்லது வேறு எங்காவது இழுத்துச்சென்று போட்டு உள்ளனவா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory