» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் ரஜினிகாந்த் மகள் திருமண விழா : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து

திங்கள் 11, பிப்ரவரி 2019 11:42:50 AM (IST)சென்னையில் நடைபெற்ற ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா திருமண விழாவில் தமிழக எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக ரஜினிகாந்த் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் பத்திரிகை வைத்தார். இதையடுத்து அவர் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார். 

திருமணத்தில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமியுடன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி ஆகியோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மு.க.அழகிரி, நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory