» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சின்னத்தம்பி யானையை முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை: வனத்துறை தகவல்

திங்கள் 11, பிப்ரவரி 2019 8:04:06 PM (IST)

சின்னதம்பி யானை மிகவும் சாதுவாக மாறியதால் காட்டுக்குள் திருப்பி அனுப்புவது சிரமம் என்று நிபுணர் அஜய் தேசாஜி அறிக்கை அளித்தார்.

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றத் தடைகோரிய வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பத்திரிக்கை செய்திகளை பார்க்கும் போது சின்னத்தம்பி யானை கடந்த சில நாட்களாக காட்டு யானை போல் செயல்படவில்லை. அதே சமயம் சின்னத்தம்பி யானையால் பயிர்களுக்கு பாதிப்பும், பொதுமக்களுக்கு அச்சுருத்தலும் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.மேலும் சின்னத்தம்பி யானை மிகவும் சாதுவாக மாறியதால் காட்டுக்குள் திருப்பி அனுப்புவது சிரமம் என்று நிபுணர் அஜய் தேசாஜி அறிக்கை அளித்தார்.

சின்னத்தம்பி யானையை காட்டுக்குள் விரட்டினாலும் ஊருக்குள் திரும்பி விடுகிறது. சின்னத்தம்பி யானையைப் பிடித்து முகாமில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அஜய் தேசாஜி அறிக்கையின் படி சின்னத்தம்பி யானையை முகாமில் பராமரிக்க முடிவு என்று உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதில் அளித்தது.சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றத் தடைகோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory