» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜயகாந்த் நலமுடன் உள்ளார்; கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பார்: பிரேமலதா பேட்டி

சனி 16, பிப்ரவரி 2019 3:59:11 PM (IST)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார், விரைவில் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தேமுதிக கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றார். இந்நிலையில் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அதிகாலை சென்னை திரும்பினாலும், 10 மணி நேரத்திற்கு பிறகே விமான நிலையத்தை விட்டு விஜயகாந்த் வெளியே வந்தார். 

பேட்டரி காரில் வந்த விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். விஜயகாந்தை வரவேற்க விமான நிலையத்தில் குவிந்து இருந்த தேமுதிக தொண்டர்களும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா, ”அதிகாலை 3 மணிக்கு வந்தோம். பயண களைப்பால் சிறிது நேரம் விஜயகாந்த் ஓய்வு எடுத்தார். விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்பார். கூட்டணிக்கு நாங்கள் முயற்சிக்கவில்லை. பல கட்சிகள் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கின்றன” என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory