» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்.. வீடியோவை வெளியிட்டது ஏன்? நக்கீரன் கோபால் விளக்கம்!

புதன் 13, மார்ச் 2019 12:43:07 PM (IST)

பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தொடர்பான வீடியோவை வெளியிட்டது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் விளக்கம் அளித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தமிழக மக்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. 250 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்த கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றங்கள் தொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோக்கள்தான் இந்த பிரச்னையை மீண்டும் லைம் லைட்டிற்கு கொண்டு வந்தது. இந்த வீடியோக்கள் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "பொள்ளாச்சி விவகாரத்தை அப்படியே விட்டுவிட மாட்டோம். இதுகுறித்து நாங்கள் தனியாக விசாரித்து வருகிறோம். எங்கள் விசாரணையும் போய்க்கொண்டு இருக்கிறது. இதன் முழு பின்னணி குறித்து விரைவில் கண்டுபிடிப்போம். இந்த பிரச்சனை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். பெண்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தடுத்து நிறுத்தி விடாதீர்கள். பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் நேரம் கிடையாது இது. பார் நாகராஜனை இந்த வழக்கில் தீவிரமாக விசாரித்தால் பல உண்மைகள் வெளியாகும்.

நமது வீட்டு பிள்ளைகளுக்கு இது போன்று நடந்தால் அமைதியாக இருப்போமா. இருக்க மாட்டோம் அல்லவா, அப்படித்தான் இதுவும். பாதிக்கப்பட்டது எல்லோரும் பெண்கள். அவர்கள் நமது பிள்ளைகள். அவர்களை நாம்தான் காக்க வேண்டும். வீடியோவை வெளியிடக்கூடாது என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. வீடியோவை வெளியிட்டால்தான் விவகாரம் வெளியே தெரியும். குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது என்ற காரணத்திற்காகவே வீடியோ வெளியிடப்பட்டது, அது தற்போது நடந்து இருக்கிறது, என்று நக்கீரன் கோபால் கூறியுள்ளார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory