» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாலியல் விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மகனிடம் விசாரணை: மகளிர் ஆணையம் தகவல்

வியாழன் 14, மார்ச் 2019 11:18:16 AM (IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமன்  மகனிடம் விசாரணை நடத்தப்படும் என மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.  

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்ட்ட வீடியோ வெளியானது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடுமைக்குக் கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்துகின்றனர். cஇந்த விவகாரம் தொடர்பாக கோவை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்த மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன்,  கோவை மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்தினோம்.

இந்த விவகாரத்தில் காவல் துறை முறையாக விசாரணை நடத்துகிறது. ஊடகங்கள் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றன என்றார். பெண்கள் குறைகளைச் சொன்னால், நடவடிக்கை எடுப்போம். பெண்ணின் பெயரை குறிப்பிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்தப்படும்.தேவைப்பட்டால் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.   இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் 044-2855155, 044-28592750 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory