» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 15, மார்ச் 2019 4:06:11 PM (IST)

அனுமதியில்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாய நிலைங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என கூறிய நீதிபதிகள் திட்ட அனுமதியில்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் 110 டாஸ்மாக் கடைகளை மூடியதற்கான அறிக்கையை மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory