» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக - காங்கிரஸ் கூட்டணி அடிக்கடி நிறமாறும் பச்சோந்தி கூட்டணி: தமிழிசை விமர்சனம்

வெள்ளி 15, மார்ச் 2019 4:24:46 PM (IST)

திமுக - காங்கிரஸ் கூட்டணி அடிக்கடி நிறமாறும் பச்சோந்தி கூட்டணி என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், 

காங்கிரஸ் கட்சி தலைவர், 

ராகுல் காந்தி இங்கே மேடையில் தமிழக கம்யூனிஸ்டுகளை கட்டியணைத்துவிட்டு அடுத்தநாள் கேரளா சென்றவுடன் அங்குள்ள கம்யூனிஸ்டுகளை  கொலைகார கம்யூனிஸ்டுகள் என்று கண்டித்து உரையாற்றுகிறார். 

திமுக கட்சி தலைவர், 

மதசார்பின்மை கட்சியை ஆதரிப்போம் என்று கூறும் ஸ்டாலின், கட்சி பெயரே மதம் சார்ந்த பெயர் கொண்ட கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதுதான்  உங்கள் மதச்சார்பின்மையா?

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்,    

நேற்று இலங்கை தமிழின படுகொலைக்கு துணை நின்ற ராகுல் காந்தியை கட்டியணைத்து வரவேற்று அடுத்த நாள் சென்னையில் இலங்கை தமிழின படுகொலையை கண்டித்து இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தும் திருமாவளவன்.

மதிமுக கட்சி தலைவர்,

கோடம்பாக்கத்தில் சினிமா பாணியில் இராணுவ  உடை இரவல் வாங்கி அணிந்துகொண்டு கள்ளத்தோனில் சென்று வந்து கண்ணீர்விட்டு கொலைப்பழி சுமத்தியதாக தொண்டர்களை தூண்டிவிட்டு அவர்களை தீக்கிரையாக்கி விட்டு ஸ்டாலினை முதல்வராக்குவோம் என முழங்கும் வைகோ.

கம்யூனிஸ்ட் கட்சிகள்,

ராஜ்யசபா சீட்டுக்காக திமுக - அதிமுக என மாறி மாறி கூட்டணி சேரும் பச்சோந்திகள்.  சென்னையில் பட்டாசுக்கு எதிராக போரட்டம் நடத்திவிட்டு சிவகாசிக்கு சென்று பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது,நகரங்களில் சர்க்கரை விலையை குறைக்க சொல்வதும், கிராமங்களுக்கு சென்று கரும்புக்கான கொள்முதல் விலை ஏற்ற சொல்வதும் கம்யூனிஸ்ட்களின் நிறமாறும் அரசியல். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து

ஒருவன்Mar 17, 2019 - 09:02:01 PM | Posted IP 162.1*****

பொறி உருண்டை யும் பச்சோந்தி தான் .. வாயில் நிறைய பொய்கள் வரும் ஆனால் உண்மை வராது

jamaMar 15, 2019 - 06:58:31 PM | Posted IP 162.1*****

நீங்க இப்போ என்ன சொல்ல வாறீங்க .உங்களுக்கு வோட்டு போட சொல்ல வாரீங்களா.போட்டுட்டா போச்சு.ஆனா இந்த முறை எப்படியாவது நீங்க நோட்டாவை ஜெயிச்சிடனும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory