» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவையில் பி.ஆர். நடராஜன், மதுரையில் சு. வெங்கடேசன்: சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு

வெள்ளி 15, மார்ச் 2019 4:54:54 PM (IST)

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களின் விவரத்தை இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிவித்தார்.அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கோவையில் பி.ஆர். நடராஜன், மதுரையில் சு. வெங்கடேசன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

கோவை மாவட்ட முன்னாள் எம்.பி. பி.ஆர். நடராஜன், 1968ம் ஆண்டு முதல் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.  மதுரைத் தொகுதியில் போட்டியிடும் எழுத்தாளர் சு. வெங்கடேசன் காவல் கோட்டம் என்ற நூல் இயற்றியதற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory