» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டானது; பெண்ணுக்கு தீவிர சிகிச்சை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

புதன் 20, மார்ச் 2019 11:53:48 AM (IST)

கூவத்தூரில் கர்பிணிக்கு சுகப் பிரசவம் பார்த்தபோது, சிசுவின் தலை துண்டான சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேற்று இரவு நிறைமாத கர்பிணியான பொம்மி பிரசவ வலியோடு வந்துள்ளார். ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்க அங்கு மருத்துவர் இல்லாததால், பணியில் இருந்த செவிலியர் பிரசவம் பார்த்துள்ளார். கர்பிணிக்கு சுகப்பிரசவம் பார்த்தபோது எதிர்பாராதவிதமாக, குழந்தையின் தலை துண்டானது. குழந்தையின் உடல் பொம்மியின் வயிற்றுக்குள் சிக்கிக் கொண்டதால் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

உடனடியாக பொம்மி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, பொம்மியின் வயிற்றுக்குள் இருந்த உடல் பகுதி மீட்கப்பட்டது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட பொம்மிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 30 கிராம மக்களுக்கு பயன்படும் ஆரம்ப சுகாதார மையத்தில் இரவு நேரத்தில் ஒரு மருத்துவர்கள் கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory