» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

வியாழன் 21, மார்ச் 2019 11:29:02 AM (IST)

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன், திருச்சியில் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

அமமுக-வின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் விபி கலைராஜன். முன்னாள் எம்எல்ஏவான இவர் அமமுக-வில் நேற்று திடீரென நீக்கப்பட்டார். கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டதால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கியிருப்பதாக கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்தார். திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் முன்னிலையில் கட்சியில் சேர்ந்துள்ளார். அவரை ஸ்டாலின் வரவேற்று வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வி.பி.கலைராஜன், டிடிவி தினகரனுடன் தனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து மேலும் பலர் விரைவில் திமுகவில் இணைவார்கள் என்றும் கூறினார். தலைவர் ஸ்டாலின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு கட்சிப் பணியாற்ற உள்ளதாகவும் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory