» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கு: அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை

வியாழன் 21, மார்ச் 2019 11:42:02 AM (IST)

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டதால் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் கடந்த 2007ம் ஆண்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த ஊழியர்கள் கோபிநாத், வினோத், முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. 

இதனை எதிர்த்து சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, குற்றம்சாட்டப்பட்ட அட்டாக் பாண்டி உட்பட 7 பேரை விடுதலை செய்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், சம்பவத்தின் போது உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory