» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

என்னிடம் பொறுப்பை கொடுத்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பேன்- டிஆர் பாலு சவால்!!

வியாழன் 21, மார்ச் 2019 12:48:19 PM (IST)

என்னிடம் பொறுப்பை கொடுத்தால் மறுநாளே பெட்ரோல், டீசல் விலையை குறைப்பேன் என முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு கூறியுள்ளார். 

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம், சென்னையை அடுத்த குரோம் பேட்டையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது, "1 லிட்டர் பெட்ரோல் ரூ.74.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இது நியாயமான விலை கிடையாது. காரணம் நான், 1996-ல் பெட்ரோலிய துறை அமைச்சராகஇருந்தேன். இன்றைக்கு என்னிடம் அந்த பொறுப்பை கொடுங்கள். நான் நாளை காலைக்குள் 40 ரூபாயாக பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன். நான் சவால் விடுகிறேன். 40 ரூபாய்க்கு நான் பெட்ரோலை கொடுக்கிறேன். அப்படி செய்தால் பா.ஜனதாவினர் யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது. பா.ஜனதாவினரால் அது முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். 


மக்கள் கருத்து

IndianMar 22, 2019 - 05:58:11 PM | Posted IP 172.6*****

Is it not enough the money earned till now?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory