» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்படும் : நிதின் கட்கரி உறுதி

ஞாயிறு 14, ஏப்ரல் 2019 10:20:51 PM (IST)

சேலம்,சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதிபட தெரிவித்தார்.

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து தீர்ப்பு கூறியது. இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை 8 வாரத்துக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என்ற கோரிக்கை வலுக்கிறது.

இந்நிலையில் சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதிபட கூறியுள்ளார். சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணணை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, விவசாயிகளுடன் பேசி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

மேலும் கட்கரி பேசுகையில், கோதாவரியில் இருந்து உபரி நீர் வீணாக கடலில் கலப்பதாகவும், அதனை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பாஜக ஆட்சி அமைத்தவுடன் இந்த திட்டம் முதலில் தொடங்கப்படும் எனவும், இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும் என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

ஒருவன்Apr 16, 2019 - 08:23:41 AM | Posted IP 162.1*****

வடநாட்டவனுக்கு இங்கு என்ன வேலை .... உன் திட்டம் உன் நாட்டில் கொண்டு வை

நிஹாApr 15, 2019 - 06:18:34 PM | Posted IP 141.1*****

8 வழிசாலையை வேண்டுமானால் நிறைவேற்றுவீர்கள். ஆனால் கோதாவரி திட்டம் என்பது நீங்கள் கருப்பு பணத்தை மீட்ட கதையாக தான் போகும்.

பாலாApr 14, 2019 - 10:48:43 PM | Posted IP 141.1*****

ஹி ஹி கோமியக்குடிக்கிகள் எல்லாம் லூசா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory