» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யின் மனைவி குத்திக் கொலை : மகனுக்கு போலீஸ் வலை!!

திங்கள் 15, ஏப்ரல் 2019 12:15:08 PM (IST)

சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி, பெற்ற மகனால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவர் அ.தி.மு.க. முன்னாள்  எம்.பி. குழந்தைவேலுவின் மனைவியாவார். சில ஆண்டுகளுக்கு முன் குழந்தைவேலு இறந்து விட்டதால் ரத்தினம் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு ரத்தினத்தின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது உறவினர் ஒருவர் சென்று பார்த்த போது, ரத்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த சாஸ்திரிநகர் போலீசார் நடத்திய விசாரணையில், ரத்தினத்தின் மகன் பிரவீன் என்பவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருவது தெரியவந்தது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாக சொத்துப் பிரச்சினை காரணமாக பிரவீன் தமிழகம் வந்துள்ளார். சொத்து பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் தனது தாயைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து தப்பி ஓடிய பிரவீனை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory