» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென் தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

திங்கள் 15, ஏப்ரல் 2019 5:09:47 PM (IST)

தென் தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதக் கடைசியிலேயே கோடை வெய்யில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 18ம் தேதி அல்லது அதற்கு ஒருநாள் முன்பு அல்லது ஒரு நாள் பின்பு தொடங்கி அடுத்த 10 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

கடற்கரையை தள்ளியிருக்கும் உள் மாவட்டங்களில் மழை வாய்ப்பு இருக்கும். அதே சமயம் கடற்கரையை ஒட்டியிருக்கும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போதிருக்கும் அதே வெப்பநிலையே நீடிக்கும். அதாவது 35 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம் நீடிக்கும். அதே சமயம், உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும். அடுத்த 10 நாட்கள் என்றால் 10 நாட்களும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யாது. 

அடுத்த 10 நாட்களில் ஏதேனும் ஒரு சில நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும்.  குறிப்பாக நீலகிரி, திருநெல்வேலியின் மலைப் பகுதியை ஒட்டியிருக்கும் பகுதிகள், தேனி போன்ற மாவட்டங்களில் ஒரு சில நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கன மழை எல்லாம் கிடையாது. ஒரு அரை மணி நேரம் அல்லது கால் மணி நேரம் தான் மழை பெய்யும். இதற்குக் காரணம் என்ஜிஓ தான். நமது இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு என்ஜிஓ வந்திருப்பதே மழைக்குக் காரணமாக அமையும். அதில்லாமல் மேற்கில் இருந்து வரும் காற்றும், கிழக்கில் இருந்து வரும் காற்றும் மோதுவதால் உள் மாவட்டங்களில் இந்த மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory