» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாங்கள் செலவு செய்த பணத்தை தேர்தல் ஆணையம் திருப்பி தருமா? சீமான் கேள்வி

வியாழன் 18, ஏப்ரல் 2019 12:49:59 PM (IST)

சுதீஷை துரைமுருகன் அவமதித்த காரணத்தினால்  தேமுதிகவை மகிழ்ச்சி படுத்துவதற்காகத்தான் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என சீமான் குற்றம்சாட்டினார். 

லோக்சபா தேர்தலில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித் அவர் கூறியதாவது வாக்குப்பதிவு எந்திரங்கள் பல இடங்களில் பழுதாகி இருக்கிறது. அந்த அளவிற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பற்று உள்ளது. இதை ஏற்கனவே சோதித்து இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பொறுப்பற்று செயல்படுகிறது. இதை எல்லாம் கூடவா பார்க்காமல் இருப்பார்கள்.

வருமானவரித்துறையை வைத்து நாடகம் ஆடுகிறார்கள். வேலூரில் மட்டும்தான் பணம் கொடுத்தார்களா? மக்களுக்கு எதை காட்ட நினைக்கிறீர்கள். வேறு எங்குமே காசு கொடுக்கவில்லையா?. மக்களை ஏன் ஏமாற்ற பார்க்கிறீர்கள்.  நீங்க சொன்ன செலவை கூட நாங்கள் முழுதாக செய்யவில்லை. நாங்கள் செலவு செய்த பணத்தை தேர்தல் ஆணையம் திருப்பி தருமா. முறைகேடாக செலவு செய்த நபரை மட்டும்தான் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். 

எல்லோருக்கும் தண்டனை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். காசு கொடுத்த வேட்பாளர் 10 ஆண்டுகளுக்கு போட்டியிட கூடாது என்று தடை விதிக்க வேண்டும். இது அதிமுக கூட்டணியின் தேர்தல் ஆணையம். சுதீஷை துரைமுருகன் அவமதித்த கோபத்தில், தேமுதிகவை மகிழ்ச்சி படுத்துவதற்காகத்தான் தேர்தல் ஆணையம் வேலூரில் இப்படி செயல்படுகிறது, என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory