» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : தூத்துக்குடியில் கனிமொழி பேட்டி

வியாழன் 18, ஏப்ரல் 2019 1:07:07 PM (IST)

பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தூத்துக்குடியில் கனிமொழி பேட்டியின் போது கூறினார்.

திமுக வேட்பாளர் கனிமொழி சென்னையில் தனது வாக்கை பதிவு செய்த பின்னர் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். மில்லர்புரம் செயின்ட்மேரிஸ் பள்ளி வாக்குச்சாவடியை பார்வையிட்டார். அங்கிருந்த திமுக பூத் ஏஜன்டிடம், பூத் அலுவலரிடம் வாக்குப்பதிவு குறித்து விசாரித்தார். பிறகு செய்தியாளர்களிடம் கூறும் போது, 

தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். எங்கள் வெற்றி பிரகாசமாக உள்ளது. தமிழிசை செளந்தரராஜன் மற்றும் அமைச்சர் கடம்பூர்ராஜு உத்தரவின் பேரில் காவல்துறை திமுகவினருக்கு பல நெருக்கடிகளை அளித்து வருகின்றனர். தேர்தல்கமிஷன் தொடர்ந்து ஆளுங்கட்சி சொல்வதை மட்டுமே செய்கிறது. இங்கு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக மக்கள் வாக்களிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. 

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். அப்பகுதி மக்களுக்கு கூடுதலாக வாக்களிக்க நேரம் கேட்டுள்ளோம். தேர்தலில் பல இடங்களில் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு சரியான வசதிகள் செய்யப்படவில்லை. பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை. 

வளர்ந்த நாடுகளில் வாக்குசீட்டு முறையே கடைபிடிக்கபடுகிறது. ஈவிஎம் இயந்திர முறையை மாற்றுவதற்கு பாஜக பிடிவாதம் பிடிக்கிறது. அதனால் மக்களிடம் அச்சமும் நம்பிக்கையின்மையும் ஏற்படுகிறது. தேர்தல் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory