» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சம் இல்லை: பாமக நிறுவனர் ராமதாஸ் புகார்

வியாழன் 18, ஏப்ரல் 2019 3:44:19 PM (IST)

வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சம் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழன் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சம் இல்லை என்றும் அதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று காலை அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது திண்டிவனம் வாக்குச்சாவடியில் நான் வாக்களிக்கச் சென்ற போது  வாக்கு எந்திரம் வைக்கப்பட்டிருந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை. வாக்களிக்க சிரமமாக இருந்தது. இன்னும் பல பகுதிகளில் இதேநிலை காணப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் 6 மணி நேரம் உள்ளது.  வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சம் கிடைக்க தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory