» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டம்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

வியாழன் 18, ஏப்ரல் 2019 4:28:15 PM (IST)

மதியம் மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக, தேர்தல் ஆணையத்தில்  திமுக புகார் அளித்துள்ளது.

தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழன் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 39.49% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் மதியம் மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக, தேர்தல் ஆணையத்தில்  திமுக புகார் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், திமுக சட்டத்துறை செயலர் கிரிராஜன் நேரிடையாக அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது: வியாழன் மதியம் மூன்று மணிக்கு மேல் குறிப்பிட்ட இடங்களில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் அங்கு செயல்பட்டு வரும் சிசிடிவி கேமராக்களை செயலிழக்கச் செய்யய அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் காவல்துறை பாதுகாப்பை குறைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  எனவே தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தமிழகத்தில் தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory