» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு: சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம்

வியாழன் 18, ஏப்ரல் 2019 4:32:06 PM (IST)

தமிழகத்தில் மாலை 3 மணி நிலவரப்படி 52.02 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். 

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 30.62  சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
 
இதற்கிடையே, மதியம் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. 52.02 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். "3 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கரூரில் 56.85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்த பட்சமாக மத்திய சென்னையில் 45.65 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து எந்த புகாரும் வரவில்லை” என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory