» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜக - அமமுக தொண்டர்கள் இடையே மோதல் : பாஜகவினருக்கு கத்திக்குத்து

வியாழன் 18, ஏப்ரல் 2019 7:59:25 PM (IST)

கன்னியாகுமரி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாஜக - அமமுக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நடைபெற்று முடிந்துள்ளது. சில இடங்களில் கட்சியினரின் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது . இதில் கன்னியாகுமரி தொகுதி வீரவநல்லூர் பகுதி வாக்குச்சாவடியில் பாஜக - அமமுக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதில் பாஜக தொண்டர்கள் மணிகண்டன், சுரேஷ் உள்ளிட்ட 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory