» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை : கோதையாறில் பரபரப்பு சம்பவம்

புதன் 24, ஏப்ரல் 2019 1:14:35 PM (IST)

மணிமுத்தாறு 9-வது பட்டாலியன் காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் அஜின்ராஜ். மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியனில் பணிபுரிந்து வந்த இவர்,  இன்று காலை கோதையாறு மின் உற்பத்தி நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறத. கடந்த 21 நாட்களாக விடுப்பில் இருந்த அஜின் ராஜ், இன்று தான் மீண்டும் பணியில் சேர்ந்தாராம். 

இந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் போலீசார் தற்கொலை சம்பவங்கள், காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அஜின்ராஜ் தற்கொலை  குறித்து கோதையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory