» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கட்சிப் பதவியிலிருந்து விலகினாலும் அ.தி.மு.க.வுக்கு விஸ்வாசமாக இருக்கிறேன்: தோப்பு வெங்கடாசலம்

புதன் 22, மே 2019 3:31:15 PM (IST)

கட்சிப் பதவியை ராஜினாமா செய்தாலும், அ.தி.மு.க.வுக்கு விஸ்வாசமாக இருக்கிறேன் என தோப்பு வெங்கடாசலம் கூறினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும், மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராகவும் இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். இவர்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று   தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர். 

இந்த நிலையில் இன்று தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர கூறியதாவது; சொந்த காரணங்களால் கட்சி பதவியில் இருந்து விலகுவதாக கூறி தான் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தேன். முதல்வர்- துணை முதல்வர் எனக்கு தகுந்த மரியாதை தருகின்றனர். வேறு இயக்கத்திற்கு நான் செல்லப்போவதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது. அ.தி.மு.க.விலேயே தான் இருக்கிறேன். அ.தி.மு.க.வுக்கு விஸ்வாசமாக இருப்பது போல் மக்களுக்கும் விஸ்வாசமாக இருக்கிறேன் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory