» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்மேற்கு பருவ மழை நாளை தொடங்குகிறது : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெள்ளி 7, ஜூன் 2019 4:28:46 PM (IST)

தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் நாளை (ஜூன் 8) தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் தென்மேற்குப் பருவ மழை குறித்த சென்னையில் இன்று  வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவக் காற்று வலுவடைந்துள்ளது. மேற்கு கடற்கரை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருகிறது. 

வளிமண்டல கீழடுக்கில் காற்றின் திசை கிழக்கு - மேற்காக மாறுதல் ஏற்படும் பட்சத்தில் பருவமழை துவங்கக் கூடும். இந்த நிலையில், நாளை ஜூன் 8ம் தேதி கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்க உள்ளது என்று அறிவித்தார்.மேலும், வெப்பநிலையைப் பொறுத்தவரை  தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகமாக பதிவாகக் கூடும். கேரளாவில் நாளை தென்மேற்கு பருவ மழை துவங்க வாய்ப்புள்ள நிலையில், கேரளாவில் நாளை பருவ மழை தொடங்கி படிப்படியாக பிற மாநிலங்களுக்கும் தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory