» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செல்போனில் பெண்ணிடம் ஆபாசமாக பேச்சு : நாகர்கோவில் அருகே வாலிபருக்கு தர்மஅடி

சனி 8, ஜூன் 2019 11:02:42 AM (IST)நாகர்கோவில் அருகே பெண்களை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்த ஒருவனை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

நாகர்கோவில் அடுத்த தளவாய் புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன், இவர் தனது மனைவிக்கு துணிக்கடையுடன் கூடிய டெயிலர் கடை ஒன்றை ஒரு மாதத்திற்கு முன்பு வைத்துக் கொடுத்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக தினமும் சுப்பிரமணியன் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொள்ளும் மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக பேசுவது, ஐ லவ் யூ என்று எஸ்எம்எஸ் அனுப்புவது என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளான். இது தொடர்பாக சுப்பிரமணியன் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ஆனால் காவல்துறையினர் இது சைபர் குற்றப்பிரிவு காவல்துறைதான் விசாரிக்க இயலும் என்று புகாரை விசாரிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.ஆனால் தொடர்ந்து அந்த மர்ம நபர் செல்போனில் ஆபாசமாக பேசி வந்ததால் கடையை தொடர்ந்து நடத்த இயலாத மன நிலைக்கு அவரது மனைவி தள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து தனது மனைவியை அந்த மர்ம நபரிடம் பேசவைத்து நேரில் சந்திக்கலாம் வாருங்கள் என சாமர்த்தியமாக பேசி வரவழைத்துள்ளார் சுப்பிரமணி.

இதை நம்பி அங்கு வந்த வாலிபரை பிடித்து அங்கிருந்த ஊர்மக்கள் தர்மஅடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து அவரை மின் கம்பத்தில் கட்டிவைத்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராம்பிரபு என்பதும், கடந்த 10 தினங்களுக்கு முன்பு துணிக்கடைக்கு வந்து அங்குள்ள பெண்களிடம் ஆபாசமாக பேசியதால் விரட்டப்பட்ட மர்ம நபர் என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து சுப்பிரமணியின் மனைவியை கண்காணித்து அவர் எப்போது கடைக்கு வருகிறார், வீட்டுக்கு எப்போது செல்கிறார் கடையில் யார்? யார்? இருக்கிறார்கள் என்பதை கண்காணித்துள்ளான் ராம் பிரபு. கடையின் போர்டில் இருந்து செல்போன் நம்பரை எடுத்து சுப்பிரமணியனின் மனைவிக்கு இது போன்று ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory