» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாடகை ஒப்பந்தங்களைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் தமிழக அரசு அறிவுறுத்தல்

சனி 8, ஜூன் 2019 12:54:34 PM (IST)

வாடகை ஒப்பந்தங்களைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள்-பொறுப்புகளை முறைப்படுத்தும் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் குறித்த பயிற்சி வகுப்பு சென்னையில் நேற்று நடத்தப்பட்டது. அதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

புதிய சட்டத்தின்படி வாடகை அதிகாரியாக வருவாய் கோட்ட அலுவலர் அல்லது தனித் துணை ஆட்சியர் இருப்பார். அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் எழுத்து மூலமாக கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இந்தச் சட்டமானது கடந்த பிப்ரவரி 22 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தேதிக்கு முன்பாக எழுதப்படாத ஒப்பந்தங்களையும் எழுத்து மூலமாகப் பதிவு செய்வதற்கு உரிய கால அவகாசமானது 120 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த பிப்ரவரி மாதத்துக்கு முன்பாக நான்கு மாதங்களுக்குரிய வாடகை ஒப்பந்தங்களைப் பதிவு செய்ய வேண்டும். எழுத்து வடிவிலான வாடகை ஒப்பந்தமானது சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரரால் கட்டாயமாகப் பதிவு செய்திட வேண்டும் என செயலாளர் கிருஷ்ணன் அறிவுறுத்தினார்.


மக்கள் கருத்து

அருண்Jun 10, 2019 - 04:17:50 PM | Posted IP 117.2*****

எவனாச்சும் பண்ணுனா பாக்கலாம்... எல்லாம் திருட்டு நாய்ங்க...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory