» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு தமிழிசை நிதியுதவி: கல்வி கட்டணத்தை ஏற்றார்

சனி 8, ஜூன் 2019 3:46:53 PM (IST)நீட் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை அரசு பள்ளி மாணவி ஜீவிதாவை நேரில் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் முதற்கட்டமாக ரூ 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவி ஜீவிதா நீட் தேர்வில் வெற்றி பெற்று 720 மணப்பெண்ணுக்கு 605 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் அவரது மருத்துவ படிப்புக்கு உதவுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ஏழை தையல் தொழிலாளர் மகள் மாணவி ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவ கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்கிறேன். ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவ கனவு நனவாகட்டும்... மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டார். 

இந்நிலையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை அரசு பள்ளி மாணவி ஜீவிதாவை நேரில் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் முதற்கட்டமாக ரூ 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, நீட் தேர்வு குறித்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை அரசியல் கட்சி தலைவர்கள் தவிர்க்க வேண்டும். தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது என கூறினார். தமிழிசை செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த ஜீவிதா, அரசுப்பள்ளியில் படித்தாலும் நீட் தேர்வில் வெற்றிபெறலாம் என்றும், மாணவர்கள் தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory