» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்மேற்கு பருவமழை தொடங்கியது: தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சனி 8, ஜூன் 2019 3:55:36 PM (IST)

தென்மேற்கு பருவமழை தொடங்கியது தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: அரபிக்கடல் பகுதியில், மாலத்தீவு, லட்சத் தீவுகளில் மேகங்கள் அதிகரித்துள்ளன. கேரளாவில் பருவமழை தொடங்கிவிட்டது. மேற்கு மலைத் தொடர்ச்சியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் பருவமழை தொடங்கி விட்டது. கன மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 

சென்னையில் வெயிலின் தாக்கம் குறைய ஒரு வாரம் ஆகும். கேரளாவில் தற்போது மழையின் அளவு குறைவாகவே உள்ளது என கூறினார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு தீவிர கனமழையைக் குறிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களில் நாளையும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை மறுநாளும் கன முதல் மிக கனமழை பெய்யுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory