» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா நினைவிடத்துக்கு 9 எம்.எல்.ஏ.க்கள் ஏன் செல்லவில்லை? முதல்வர் விளக்கம்!

சனி 8, ஜூன் 2019 5:07:34 PM (IST)

அதிமுகவில் கோஷ்டி பூசல் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று (ஜூன் 8) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் எனவும், பொதுக் குழுவில் இதனை தெரிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தேனி தொகுதியில் வெற்றிபெற்ற ரவீந்திரநாத் மட்டும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற 9 பேர் அஞ்சலி செலுத்துவதை தடுத்தது யார் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுதொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "நான் இன்னும் அந்த பேட்டியைப் பார்க்கவில்லை. அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை கேட்ட பிறகுதான் அதுகுறித்து பதில் சொல்ல முடியும். இது கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதிமுகவில் கோஷ்டி பூசல் இருப்பதாகக் கூறுவது தவறான தகவல். எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும்தான் இவ்வாறு கூறுகிறீர்கள். அதிமுக பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. அதனால்தான் 9 எம்.எல்.ஏ.க்கள் வெற்றிபெற்றனர். அமமுகவினரும் அதிமுகவுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.

9 எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா நினைவிடத்துக்கு ஏன் செல்லவில்லை என்ற கேள்விக்கு, "இது தவறான கருத்து. பல சட்டமன்ற உறுப்பினர்கள் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்திருக்கிறார்கள்.ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதால் யாரும் அங்கு செல்லவில்லை” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory