» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத்திய அமைச்சரவையில் சேருகிறதா தி.மு.க.?: டி.ஆர். பாலு பதில்

ஞாயிறு 9, ஜூன் 2019 9:16:38 PM (IST)

மத்திய அமைச்சரவையில் தி.மு.க.சேருகிறது என்று பத்திரிகையில் வெளியான செய்திக்கு, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடாளுமன்றம் ஒவ்வொரு முறையும் கூடுவதற்கு முன்னால் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற ஆதரவு கேட்பது வழக்கமான ஒன்று. அந்த நடைமுறைப் பழக்கப்படி நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் இணை அமைச்சர் அர்ஜுன்ராமும் என்னுடன் கலந்து பேசியதும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதும் உண்மைச் செய்திகள்.

அவர்கள் என்னிடம் பேசிய போது, நாடாளுமன்ற நடவடிக்கைகள் எந்தெந்த தேதிகளில் எத்தகைய நிகழ்வுகள் அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கிறது என்பதை தெரியப்படுத்தினர். ஆனால், 6 மாதம் கழித்து திமுக உறுப்பினர்கள் பாஜக மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்ற ஒரு நாளேட்டின் யூகச்செய்தி கடைந்து எடுத்த கலப்படமற்ற பொய். திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினும் அவரின் அடியொற்றி பயணிக்கின்ற உண்மை தொண்டர்களும் வெளிப்படையானவர்கள் மட்டுமல்ல; ஓளிவு மறைவற்ற, நேர்மையான ஜனநாயகத்தின் ஊற்று கண்கள் என்பவற்றை வரலாறு அறியும். இதில் ஜனநாயக குருடர்களுக்கு வேலை இல்லை. இவ்வாறு, டி.ஆர். பாலுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory