» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை: போலீசாருக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை

ஞாயிறு 9, ஜூன் 2019 9:35:41 PM (IST)

தலைக்கவசம் அணியாமலோ, குடிபோதையில் வாகனம் ஓட்டினாலோ வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாரை, சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் இன்று எச்சரித்துள்ளார்.

கட்டாய தலைக்கவச சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்கும் வேளையில், சில போலீசார் வாகன விதிகளை மதிப்பதில்லை என்று சமூக வலைத்தளங்களில் குற்றஞ் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். சாலை விதிமீறலில் ஈடுபடும் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யுமாறும். வழக்குகளின் தன்மையைப் பொறுத்து காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  காவலர்கள் மீதான வழக்குப்பதிவு குறித்த அறிக்கை அன்றாடம் தனக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory