» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கட்சி முடிவுகள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது: ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை

ஞாயிறு 9, ஜூன் 2019 9:55:29 PM (IST)

கட்சியின் முடிவுகள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்று அதிமுக ஒற்றைத் தலைமை விவகார சர்ச்சை குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதிமுகவிற்கு வலுவான ஒற்றைத்தலைமை தேவை என மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா சனிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒற்றை தலைமையில் அதிமுகவை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும். இரண்டு தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ராஜன் செல்லப்பா-வுக்கு ஆதரவாக குன்னம் அதிமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் கருத்து கூறியதால் அதிமுகவில் சர்ச்சை நிலவியது. இத்தகைய பரபரப்பான சூழலில் சென்னையில் ஜூன் 12-ல் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒற்றைத் தலைமை விவகார சர்ச்சை குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கட்சியின் நிர்வாகம், தேர்தல் முடிவுகள், கட்சியின் முடிவுகள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது. அதிமுக செயல்பாடு குறித்து கட்சியினர் சிலர் கூறிவரும் கருத்துகள் வரவேற்கத்தக்கவையாக இல்லை. கருத்துகளை கூற செயற்குழு, பொதுக்குழு என்று பல வாய்ப்புகள் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊர் இரண்டுபட்டால் யாருக்கு கொண்டாட்டம் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.

அதிமுகவை பார்த்து நம் எதிரிகளும் கூட நம்மைப்போல் இருக்க ஆசைப் பட்டார்கள். அதிமுக மீதான அன்பு, பற்று அடிப்படையில் இத்தகைய கருத்துகளை கூறிவருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. கடந்த சில நாட்களாக கழக உடன்பிறப்புக்கள் சிலர் கழகத்தின் செயல்பாடுகளைப் பற்றியும், இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுவரும் கருத்துக்கள் அவ்வளவு வரவேற்கத் தக்கவையாக இல்லை. கழக உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவருக்கும் கழகத்தின்மீது அளப்பரிய அன்பும், பற்றும் இருக்கிறது என்பதையும், அந்த உணர்வுகளின் காரணமாகத்தான் இத்தகைய கருத்துக்களை கூறி வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து நாம் செயல்பட வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory