» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடுக்கடலில் தத்தளித்த குமரி மாவட்ட மீனவர்கள் : சரக்குக் கப்பல் ஊழியர்கள் மீட்டனர்.

திங்கள் 10, ஜூன் 2019 11:36:11 AM (IST)

கேரள மாநில கடல் எல்லையில் படகு பழுதடைந்ததால் கடலில் தத்தளித்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஆறு ‌பேரை சரக்குக் கப்பல் ஊழியர்கள் மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமமான நீரோடி, வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள், நீரோடியைச் சேர்ந்த ஆல்பிரட் என்பவருக்குச் சொந்தமான ஆச்சர்ய மாதா என்ற மோட்டார் பொருத்திய நாட்டுப் படகில் கேரள மாநிலம் நீண்டகரை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 6-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது நேற்று காலை திடீரென படகு பழுதடைந்தது. 

கரையிலிருந்து 32 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் பழுதடைந்த படகில் 6 மீனவர்களும் தத்தளித்தனர். நேற்று மாலை வரை அந்த வழியாக எந்த மீன்பிடிப் படகுகளும் செல்லவில்லை. இந்த நிலையில், நேற்று இரவு அந்த வழியாக சிங்கப்பூரைச் சேர்ந்த எமரால்டு-3 என்ற சரக்குக் கப்பல் வந்துள்ளது. கடலில் தத்தளித்த மீனவர்களைப் பார்த்த சரக்குக் கப்பல் ஊழியர்கள் உடனடியாக அவர்களை மீட்டனர்.ஆனால், அவர்களின் படகை மீட்க முடியவில்லை. பின்னர், இந்திய கடற்படைக்குத் தகவல் தெரிவித்து மீனவர்களை கொச்சி துறைமுகத்துக்கு அழைத்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory