» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதல் திருமணம் செய்த மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை: ஆம்பூர் அருகே பரபரப்பு

திங்கள் 10, ஜூன் 2019 5:25:01 PM (IST)

ஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்த மகளுக்கு அவரது தந்தை கண்ணீர் அஞ்சலி பேனரை வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குப்பராஜபாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது 21 வயது மகளும் அதே பகுதியை சேர்ந்த மணி (எ) சுப்பிரமணியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் காதல் ஜோடி பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

மகளின் மீது அதிகளவில் பாசம் வைத்திருந்த சரவணன் தனது மகள் சொல்பேச்சை கேட்காமல் வேற்று சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்தார்.இதனால் ஆத்திரத்தில் இருந்த சரவணன் தனது மகள் இறந்துவிட்டதாக ஊரை சுற்றிலும் இன்று கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தார். அந்த பேனரில் தனது மகள் நேற்று மதியம் இறந்துவிட்டதாகவும் அவளது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யபடுகிறது என வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதனை கண்ட அப்பகுதியினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory