» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு: அதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர்

செவ்வாய் 11, ஜூன் 2019 4:22:03 PM (IST)முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், அமமுகவிலிருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

மக்களவைத் தேர்தலில் அமமுக படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து விலகி பலரும் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். ஆனால், ஒரு சிலரோ அல்லது 10 பேரோ விலகினால் அமமுகவுக்கு பாதிப்பில்லை என்று தினகரன் கருத்து தெரிவித்துவிட்டார். கடந்த 3ஆம் தேதி நெல்லை மாவட்ட அமமுக செயலாளராக இருந்த பாப்புலர் முத்தையா, அத்தொகுதியின் வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர். அந்த வகையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், அதிமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனிருந்தார்.

2001-2006 அதிமுக ஆட்சிகாலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவிவகித்த இன்பத்தமிழன், 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் திமுகவில் இணைந்தார். அதன்பிறகு 2009இல் ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். முன்னாள் அமைச்சர் தாமரைக்கனியின் மகனான இவர், தினகரனின் அமமுகவில் விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்துவந்தார்.

இதுதொடர்பாக அதிமுக ட்விட்டர் பக்கத்தில், "மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் இன்று அமமுக கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சரான திரு. ஆர்.டி.இன்பத்தமிழன் அவர்கள் நேரில் சந்தித்து தன்னைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த அமமுகவினரும், அதிமுகவில் இணைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory