» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

புதன் 12, ஜூன் 2019 10:13:06 AM (IST)



காரைக்காலில் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது..

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சனி பகவானை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. 

இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்து அதிகாலை 5.30 மணியளவில் கோவில் வாசலில் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த 5 தேர்களில் விநாயகர், சுப்ரமணியர், தியாகராஜர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். பின்னர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருநள்ளாறு கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory